Masti Sirukathaikal / மாஸ்தி சிறுகதைகள்



  • ₹120

  • SKU: SA0018
  • ISBN: 9788172019394
  • Translator: Seshanarayana
  • Author: Masti Venkatesa Iyengar's
  • Language: Tamil
  • Pages: 150
  • Availability: In Stock

தற்கால கன்னடச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் (1891-1986) ஒரு சிறந்த கன்னடக் கவிஞர், நாவலாசிரியர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். கன்னட மறுமலர்ச்சியின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். இவரது முதல் கதைத் தொகுதி சண்ண கதெகளு (1920) ஆரம்ப காலக் கதைகள் எனக் கூற முடியாத அளவுக்குத் தரம் வாய்ந்தவை. வாசகரைக் கவரும்வண்ணம் கதைகளில் வாழ்க்கையையே ஒரு அங்கமாகச் சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டவர் மாஸ்தி.

 

சாகித்திய அகாதெமி விருது, ஞானபீட விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர் மாஸ்தி. அவரது கதைகளில் எளிமை, நடை, உரையாடல் மற்றும் மனித இயல்புகளைப் படம்பிடித்துக் காட்டும் திறன்களைக் கருத்தில் கொண்டால், தற்கால கன்னட இலக்கியத்திற்கு இக்கதைத் தொகுதியின் பங்களிப்பு நன்கு விளங்கும்.

 

மாஸ்தி சிறுகதைகளைக் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள சேஷநாராயணா, கன்னடத்தில் சிறந்த சிறுகதையாளர், நாவலாசிரியர். தமிழிலும் புலமை பெற்றவர். இவரது சிறுகதைகள் 'கலைமகள்' முதலான பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. கல்கியின் ‘பார்த்திபன் கனவு’, டாக்டர் மு.வ. அவர்களின் ‘அகல் விளக்கு’ முதலான பல நாவல்களைத் தமிழிலிருந்து கன்னடத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.

 

சாகித்திய அகாதெமி விருது பெற்ற மாஸ்தியின் கன்னடச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பைத் வரவேற்பார்கள் என்பது திண்ணம். தமிழ் வாசகர்கள்

 

 

Write a review

Captcha